சென்னை:

அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகு ராஜ்யசபா உறுப்பினரான முத்துக்கருப்பன் பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது.

இன்னும் 2 ஆண்டு பதவி காலம் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முத்துக்கருப்பன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக 30-ம் தேதி அறிவித்தார்.

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை முத்துகருப்பன் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.