சென்னை:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக பாலச்சந்திரன் பணியாற்றி வந்தார். 21 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தராக பாலச்சந்திரன் இருப்பார்.