மும்பை:

மும்பையில் உள்ள பிரபல சர்வதே பள்ளி ஒன்றில், 14வயது மாணவர்கள், தங்களுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்ட வக்கிரமான செயல் தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் உரையாடலில் தங்கள் பெண் வகுப்பு தோழர்கள் குறித்து வன்முறை மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில்,  8 மாணவர்களை பள்ளி நிர்வாகம் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விசாரணையில், மாணவர்களின் வாட்ஸ்அப் சாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக அரட்டைகள் இடம் பெற்றுள்ளதும்,  ‘கும்பல் பேங்’ மற்றும் ‘கற்பழிப்பு’ போன்ற சொற்கள் சரமாரியாக பயன்படுத்தப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 8 மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் அதிக ஈடுபாடு காட்டி உள்ளதாகவும், சக  மாணவிகளின் அங்க அளவுகளை  பார்த்து கேலி செய்துள்ளதாகவும், சிலரை லெஸ்பியன் என்றும் குறிப்பிட்டு அரட்டை அடித்துள்ள வக்கிரபுத்தியும்  தெரிய வந்துள்ளது.

நவம்பர் 23 அன்று மாணவர்களிடையே நடைபெற்ற ஒரு உரையாடலில்,  ஒரு சிறுவன், தனது வகுப்பு தோழர்களில் ஒருவரைக் குறிப்பிடுகிறான்: “அப்படியானால் ஒரு இரவு நாங்கள் சென்று அவளை இடிக்கிறோம்.” பின்னர் அவர் “கும்பல் பேங்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதே நேரத்தில் அந்தப் பெண் குறித்தும், குறிப்பிடுகிறார், இது  சக மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்பதை குறிப்பிடும் வகையில் அந்த அரட்டை இடம் பெற்றுள்ளது.

இந்த அரட்டைகளில்  மாணவர்கள், மாணவிகளை பெயர் தெரியாத வகையில் “குப்பை” (Trash) என்றே கடுமையான சொற்களில் அழைத்துள்ளனர்.  அவர்கள்மீது அவதூறுகளையும் பரப்பி உள்ளது,  தெரிய வந்துள்ளது.

அரட்டையின் ஒரு உரையாடலின்போது,: “நான் மாணவியின் அந்த சிறிய இரு ===== அழிப்பேன்” மற்றும் “நான் அவளை முழுமையாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்றும் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மாணவர்களின் இந்த அரட்டையின்போது  “கற்பழிப்பு” என்ற வார்த்தை  நான்கு முறை பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர் தனது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்படு கிறார்” என்றும், அவர்  ஓரினச்சேர்க்கையாளர்  என்றும்  கேலி செய்யப்பட்டுள்ளதும்  தெரிய வந்துள்ளது. சக வகுப்பு  தோழர்கள் ‘கே’ ‘மற்றும்’ லெஸ்பியன் ‘ என்றும் அரட்டையின் போது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

இந்த தகவல்கள், மாணவி  ஒருவரின் பெற்றோரால் மற்றொரு வாட்ஸ்அப் குரூபுக்கு பகிரப்பட்ட நிலையில், தற்போது இந்த உரையாடல்கள்  பள்ளிக்கு வெளியே உள்ள பலருக்கும் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சில மாணவிகள் பள்ளிக்கு செல்லவே பயப்படுவதாகவும், சிலர் பள்ளிக்குச் செல்ல மறுத்து விட்டதாகவும் பெற்றோர்கள்  தெரிவித்து உள்ளனர்.

பெயர் சொல்ல மறுத்த பெற்றோர் ஒருவர், மிரர் பத்திரிகையிடம் பேசும்போது, இந்த பிரச்சி னையை பள்ளி நிர்வாகம் கவனித்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்து வெளியே சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெற்றோர், “ சிறுவர்களில்  இந்த அரட்டை அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர்களுக்கு தற்போது தேவைப்படுவது  தீவிரமான மன நல ஆலோசனை என்று நான் நினைக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இந்த வாட்ஸ்அப் உரையாடல், வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நவம்பர் 8 முதல் நவம்பர் 30 வரையிலான அரட்டைகளின் முழு உரையாடலும் தங்களிடம் உள்ள பிரபல பத்திரிகையான மிரர் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள அந்த பத்திரிகை,  உரையாடல் பின்னர் பெரும்பாலும் இரண்டு சிறுமிகளை மையமாகக் கொண்டுள்ளது என்றும்,  இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரட்டைகளில் குறிப்பிடப்பட்ட சிறுமிகளின் பெயர்களை அவர்கள் சிறுபான்மையினர் மற்றும் சிறார் நீதிச் சட்டம், 2015 சட்டப்படி அடையாளம் தெரிவிக்க தடை விதிப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த வக்கிர அரட்டை குறித்து,  இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின்  பெற்றோர்களிடம் பேச முயற்சி மேற்கொண்டதாகவும், அதுபோல, பள்ளி நிர்வாகத்திடம் பேசிய முயன்றதாகவும்,  பலமுறை முயற்சித்த போதிலும் பள்ளி நிர்வாகமோ, மாணவர்கள் தரப்பிலோ  கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றும்  கூறி உள்ளது.

Thanks: mumbaimirror.indiatimes.com