டெல்லி: முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
download
இந்தியாவில் பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்பட்டதால் எத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார்.
அவருக்கு அளித்த பதிலில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருக்கும் விவரம்:
 “முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்பட்டதால் கடந்த 17 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதில், நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்து குஜராத்(292) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா(276) மூன்றாவது இடத்திலும், டெல்லி(264) நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
ஒருவருக்கு ரத்தம் ஏற்றும் முன்பு அந்த ரத்தத்தில் ஹெச்.ஐ.வி., மலேரியா, ஹெச்.பி.வி. உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்பது  சட்டம்.  ஆனால் அதை மீறி, எந்தவித சோதனையும் செய்யப்படாமல் ரத்தம் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.