பஞ்சாப்பில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

Must read

சண்டிகர் : பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த  பயங்கரவாத அமைப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த பிரிட்டன் அருகே இயங்கி வரும் மற்றொரு பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.

மன்தீப்
மன்தீப்

இது தொடர்பாக பஞ்சாப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கனடாவில் வசிக்கும் சீக்கியரான ஹர்தீப் நிஜ்ஜர் என்பவர் கலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறார். இவர் சீக்கிய இளைஞர்களை ஒன்று திரட்டி, இந்தியாவில் – குறிப்பாக, பஞ்சாபில் – பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார்.
பிரிட்டனின் கொலம்பியா நகரில் இயங்கி வரும் கலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, தற்போது கனடா அருகே முகாம் அமைத்துள்ளது.  இந்த அமைப்பு  பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையை பஞ்சாப் அரசு, வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி விட்டது. இதனால் பஞ்சாப் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று அந்த பயங்கரவாதி அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து கட்டுப்படுத்துமாறு கனடா அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மன்தீப் என்ற பயங்கரவாதி, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் கனடாவில் இருந்து இந்தியா வந்து முக்கிய தலைவர்களை தாக்க திட்டமிட்டான்.
இதற்காக பாகிஸ்தான் இருந்து பயங்கர ஆயுதங்களை பெறவும் இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவன் 1981 ம் ஆண்டு நடந்த ஸ்ரீநகர் – டில்லி விமான கடத்தல் சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது..
 

More articles

Latest article