நாளை(ஜூன் 1 ஆம் தேதி)யிலிருந்து கூடுதலாக வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.  அதாவது, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள கார்கள் வாங்கும் போது கூடுதலாக 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
இந்த கூடுதல் வரி விதிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வரி, விற்பனையக விலையின் அடிப்படையில் கார் விற்பனையாளர்களிடமிருந்து வசூலிக்கப் படும். கார் வாங்குபவர்களின் வருமான வரி கணக்கில் இந்த கூடுதல்வரி சரி செய்யப்படும்.
SERVICE_TAX_CLARIFIED
இந்த வரி தவிர ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு சில கூடுதல் வரியும் அமலுக்கு வர உள்ளன. ஹோட்டல் உணவுகள், தொலைபேசி கட்ட ணங்கள், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ், சொத்துக்கள் வாங்கும்போதும் கிருஷி கல்யாண்’ சேவை வரி 0.50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள சேவை வரி 14.5 சதவீதத்துடன் சேர்த்து 15 சதவீதமாக சேவை வரியைச் செலுத்த வேண்டும்.
இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.