சிவசேனாவின் 50:50 நிறைவேற்றப்பட வேண்டும்! மத்தியஅமைச்சர் அத்வாலே

Must read


மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தின் கூட்டணி கட்சியான  சிவசேனாவின் 50:50 என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு,  கூட்டணி கட்சியைச் சேர்ந்த  மத்தியஅமைச்சர் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.

பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா மாநில இந்திய குடியரசு கட்சி தலைவரான ராம்தாஸ் அத்வாலே, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக அமைச்சரவையில்  மத்திய அமைச்சராக உள்ளார்.

தற்போது அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை யில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், அங்கு உத்தவ் தாக்கரேவின் ஆட்சி அதிகாரத்தில் 50க்கு 50 என்ற கோரிக்கை காரணமாக, ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அத்வாலே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநலித்தில் ” பாஜக-சிவசேனா கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் தான் அரசு அமைக்க முடியும் என்றார்.

கூட்டணி என்றால் ஆட்சி அமைவதற்கு முன் பேச்சுகள் நடைபெறுவது வழக்கம் தான் என்று கூறியவர்,  பெரும்பான்மை பலம் கொண்டுள்ள ஆட்சி பாஜக தான் என்பதால் முதலமைச்சர் பதவி அந்த கட்சிக்குத்தான் தர வேண்டும். சிவசேனா கட்சி துணைமுதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ஆட்சியில் 50% பங்கு என்று சிவசேனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அது நிறைவேற்றப்பட வேண்டும், இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினை முடிவுக்க வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article