செல்பி மோகம்: தெலுங்கானா, தர்மசாகர் அணையில் மூழ்கி 5 மாணவர்கள் சாவு!

Must read

வாரங்கல்,
தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தர்மசாகர் அணையில் மூழ்கி 5 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
1telag
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் படித்துவரும்  மூன்றாமாண்டு சிஎஸ்சி பிரிவு மாணவ-மாணவிகள் சிலர் சேர்ந்து  தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாவாக வந்தனர்.
அணையின் ஓரம் உள்ள பாறையில் ஏறி மாணவி ஒருவர் நீர்த்தேக்கத்தை கவர் செய்து செல்பி எடுக்க முன்வந்துள்ளார். அப்போது கால் சிலிப்பாகி அணையினுள் விழுந்துள்ளார்.
அதை கண்ட மாணவர்கள் அவளை காப்பாற்ற அணையினுள் ஒவ்வொருவராக குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களாலும் வெளிவர முடியவில்லை. விழுந்த பகுதி  ஆழமாக இருந்ததால் அவர்களால் மீண்டு வரமுடியாமல்  தண்ணீரில் மூழ்கினர்.
1telag1
இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை தேடி கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் மாணவிகள்.
இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article