ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரிடமிருந்து வருமானவரித்துறையினர் கைப்பற்றிய டைரியில் பல முக்கிய விவகாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த டைரி தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமனோகர்ராவ் வீ்ட்டில் ரெய்டு நடந்ததது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல, நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பிறகு, எந்தெந்த கூட்டுறவு வங்கியில், சேகர் ரெட்டி எவ்வளவு பணம் மாற்றினார் என்ற தகவலும் டைரியில் இருப்பதாகவும் அதையொட்டியே கூட்டுறவு வங்கிகளில் ரெய்டு நடந்தது என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் அந்த டைரி பற்றி இன்னொரு தகவவல் பரவிவருகிறது. பிரபல பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை நிருபர்கள் சிலரது பெயர் அந்த டையிரில் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு சேகர்  ரெட்டி மாதாமாதம் சம்பளம் போல தொகை வழங்கி வந்ததாகவும் இந்த விவரம் அந்த டைரியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து டைரியில் உள்ள பிரபல பத்திரிகை ஆசிரியர்கள், தலைமை நிருபர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், “இவர்களுக்கு மாதாமாதம் சேகர் ரெட்டி அளித்துவந்த தொகை மிகக் குறைவானதுதான். ஆகவே இதில் தற்போது எங்களது நேரத்தை செலவிட விரும்பவில்லை” என்று வருமானவரித்துறை வட்டாரங்களில சொல்லப்படுகிறது.