கொழும்பு:

போரில் பாதிக்கப்பட்ட பெண்களும் விதவைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள் ஏதோ ஒரு விசயத்தை செய்ய விரும்பினால், அதற்கு அதிகாரிகள் பெண்களின் உடலை லஞ்சமாக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் சந்திரிகா குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக கிராமசேவக அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை செய்கின்றனர்.  ஒரு ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்குக்  கூட  உடலை லஞச்சமாக கேட்பதாக கூறிய சந்திரிகா, இதில் இராணுவத்தினரும் உள்ளடக்கம் என்றார்.

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக அந்தப்பெண்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை. ஆனால் உளவியல் சிகிச்சையளிக்க   நாட்டில் போதுமான நிபுணர்கள்  இல்லை.

வெளிநாட்டில் இருந்து உளவியல் சிகிச்சை தொடர்பான நிபுணர்களை வரவழைத்தாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படும் என்று சந்திரிகா கூறியுள்ளார்.