லாகூர்: 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்றுமாலை முல்தான் நகரில் பதுங்கியிருந்த ஜமாத்-உல்-அரார் என்ற அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளை சுற்றி வளைத்தபோது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லாகூரில் சட்டமன்றம் அருகில் கடந்த திங்கள் கிழமை இந்த அமைப்பு நடத்திய குண்டு வெடிப்பில் 13 பேர் உடல் சிதறி பலியானார்கள். 80 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலிபான் அமைப்பிலிருந்து விலகிய ஓர் அமைப்புதான் ஜமாத்-உல்-அரார் ஆகும்.