சிரியாவுக்கு அமெரிக்க தரைப்படை செல்கிறது:  ஐ எஸ் பயங்கரவாதிகள் கலக்கம்

Must read

சிரியா:

சிரியாவில்  ஐ எஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக  முதன்முறையாக அமெரிக்கா

தரைப்படையையும் அனுப்பிவைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ட்ரம்ப்பின் சம்மதம் கிடைத்த பின்னர்தான் தரைப்படை சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவருகிறது.

ஐ.எஸ். இயக்கத்தை ஒரு மாத காலத்துக்குள் அழித்துவிடுவதாகச் சூளுரைத்த ட்ரம்ப், அதற்கான திட்டம் ஒன்றை வரைவு செய்யும்படி  பாதுகாப்பு அமைச்சகத்தைப் பணித்திருந்தார்.  அதன்படி திட்டம் ஒன்று வரையப்பட்டிருப்பதாகவும், அதில் தரைப்படையை அனுப்பி வைப்பதையும் ஒரு அம்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம் ட்ரம்பின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்போது, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டால், உடனே அமெரிக்கத்  தரைப்படை சிரியாவுக்குள் நுழையும் என உறுதியாக கூறப்படுகிறது.

இதுவரை  சிரியா-குர்திஷ்  கூட்டுப்படைகளுடன் அமெரிக்க விமானப் படை மட்டுமே இணைந்து போரிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article