நடிகை பாவனாவை பாலியல் துன்புறுத்தல் செய்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மொழித்திரைப்படங்களில் பாவனா நடித்து வருகிறார். சினிமா சூட்டிங்குகளுக்கு கார் டிரைவர்களை ஏற்பாடு செய்துதரும் சுனில் என்பவர், சிலதினங்களுக்கு முன் பாவனாவின் காரை ஓட்ட மார்ட்டின் என்பவரை அனுப்பிவைத்தார். இவர்தான் பாவனாவின் காரை சிலதினங்களாக ஓட்டிவந்தார். இரவு 9 மணியளவில் சூட்டிங் முடித்துவிட்டு கேரளாவில் அங்கமாலி என்ற இடத்துக்கு அருகில் காரில் வரும்போது ஒரு கும்பல் அவரது வழிமறித்து காரில் ஏறிக்கொண்டது. பாலாரிவட்டம் என்ற இடம் வரை பாவனாவை அவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, அதை போட்டோக்களாகவும் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இரவு 11 மணியளவில் அங்கமாலியில் பாவனாவை விட்டுவிட்டு வேறு ஒருகாரில் தப்பிவிட்டனர்.
கக்கநாட்டில் உள்ள சினிமா இயக்குநர் வீட்டுக்கு சென்று நடந்தவிபரங்களை கூறி பாவனா அழுதிருக்கிறார்.
இதையடுத்து அந்த இயக்குநர் காவல் நிலையத்துக்குப் புகார் அளித்துள்ளார். போலீசார் இயக்குநர் வீட்டில் இருந்த பாவனாவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கார்டிரைவர் மார்டினை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி ஜி பி, நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் எல்லாம் நடிகைக்கு தெரிந்தவர்கள்தான். அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் மேலும் இருவரை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.