பேய் ஓட்டுவதாக பெண்ணிடம் பாலியல் சேட்டை! கைது செய்யப்பட்ட முஸ்லிம் சாமியார் எஸ்கேப்…

Must read

கடலூர்: பேய் ஓட்டுவதாக பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த முஸ்லிம் சாமியார் ஒருவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஸ்டேஷனில் இருந்து காவலர்களிடம் இருந்து தப்பி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு மக்களிடையே தெய்வங்களை நம்புவதுபோல பில்லி சூனியம், பேய் போன்றவைகளையும் நம்பும் பழக்கம் இருந்து வருகிறது. இதை சிலர் தங்களுக்கு சாதக மாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் மதபேதமின்றி, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களிலும் பிலிலி சூனியத்தை எடுப்பதாகவும், பேய்களை ஓட்டுவதாகவும் கூறி சிலர் பணம் சம்பாதித்து வருகின்றனர்

இந்த நிலையில் பெண்ணாடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை விரட்டுவதாக கூறிய அங்குள்ள முஸ்லிம் சாமியார் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் அம்பலமாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடத்தில் உள்ள பள்ளிவாசலில் அப்துல் ஹனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு, பில்லி சூனியம் ஏவல் போன்றவைகளை எடுப்பதாகவும். பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும் கூறி கல்லா கட்டி வருகிறார்.

இவரிடம்  திட்டக்குடியை சேங்ரந்த சக்திவேல் என்பவரின் மனைவி சின்னபொன்னு என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி இருந்த நிலையில், அவருக்கு பேய் பிடித்ததாக கூறி  பெண்ணாடம்  பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை சோதித்த அப்துல் கனி, அவருக்கு பேய் பிடித்துள்ளது. பேய் ஓட்ட வேண்டும் என்று கூறி அருகே உள்ள அறைக்கு கூட்டி சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சின்ன பொண்ணு சத்தம் போடுவதை கேட்டு அவருடைய கணவன் சக்திவேல் ஜன்னல் வழியாக பார்த்த போது, அப்துல் ஹனி பாலியல் சீண்டல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து,  சக்திவேல் தனது மனைவியை அங்கிருந்து  அழைத்துச் சென்று  பெண்ணாடம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையில் அப்துல்ஹனி அந்த பெண்ணிடம் தவறாக நடந்தது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் ஸ்டேஷினில் வைத்து  விசாரணை செய்த நிலையில்,  அப்துல்ஹனி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article