டில்லி:

ச்சநீதி மன்றத்தில் பரபரப்பையும், நீதிபதிகள் மீதான நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் சதி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில வழக்கறிஞர்களின் பின்புலத்தினாலேயே, முன்னாள் உச்சநீதி மன்ற பெண் ஊழியர்  புகார் அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சதி செயலில் ஈடுபட்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்பட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் கடந்தஆண்டு அக்டோபர் 3ந்தேதி பதவி ஏற்றார். கண்டிப்புக்கு பேர் போனவரான ரஞ்சன் கோகாய், உச்சநீதி மன்ற விசாரணை நடவடிக்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். மேலும், அவசர வழக்குகளிலும் பல்வேறு புதிய நடைமுறை களை கையாண்டார்.

இந்த நிலையில், முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், ரஞ்சன் கோகாய் தன்னை  பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று உச்சநீதிமன்ற  அனைத்து நீதிபதிகளுக்கும் பிரம்மான பத்திரம் முலம் கடிதம் எழுதியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இந்த போலியான குற்றச்சாட்டு மூலம், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும், என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையில்,  தலைமை நீதிபதியை பாலியல் வழக்கில்  சிக்க வைக்க சதி நடப்பதாக உத்சவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமை யிலான குழு விசாரிக்கும் என அறிவித்து உள்ளது. அதுபோல பாப்டே தலைமையிலான குழுவிம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பூதம் கிளம்பி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாகவும், மூத்த வழக்கறிஞர் பிரசாத்பூஷன் உள்பட சிலர் பின்னணியில் இருப்பதாகவும்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டு இருக்கிறது.  இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.