சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வயது இளம்பெண்ணை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட நபருக்கு கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நிதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள ஹனுமந்தராய சிஎச், அபிநயா கே, மற்றும் கேவி மனோஜ், பாலியல் வன்முறை தொடர்பாக இ.த.ச.376ன் கீழ் தனது மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி உடலுறவு கொள்வதற்கு முன்பே அந்த பெண்ணை கொலை செய்ததும் கொலையான பெண்ணின் சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சடலத்துடன் உறவு கொண்ட குற்றத்திற்காக தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இ.த.ச.375 & 377 (கற்பழிப்பு & இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகிய இரண்டு பிரிவுகளையும் ஆராய்ந்த நீதிபதிகள் சடலுத்துடன் உடலுறவு கொண்டதற்காக இந்த இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்த முடியாது என்பதை அறிந்தனர்.

குற்றவாளி கொலை செய்ததை உறுதிப்படுத்தி தண்டனை வழங்கிய நீதிபதிகள் கற்பழிப்பு தொடர்பாக சரியான சட்டப்பிரிவு இல்லாததை அடுத்து இதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுபோன்ற சட்டதிருத்தம் அவசியம் என்று கூறியுள்ள நீதிபதிகள் சடலங்களை பாதுகாக்கும் பிணவறையில் சி.சி.டி.வி உள்ளிட்ட கண்காணிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.