நாகர்கோவில்: நாடு முழுவதும் மதத்தை வைத்து சம்பாதிக்கும் ஏராளமான மதபோதர்கள், தங்களுக்கு உரிய இறைபணியை செய்யாமல், ஒழுக்க கேடுகளில் ஈடுபடும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி அவர்களிடம் சல்லாபம் செய்து வந்த மதபோதகரான 27வயது பெனடிக் ஆன்டோ என்ற பாதிரியார் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அந்த 27வயது மதபோதகர்  தலைமறைவாகி விட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் கிறிஸ்தவ மதபோதகர்கள் சேர்ந்து, கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்டலில் தங்கி படித்து வந்த மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல ஒரு சம்பவம் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இறைபணி செய்வதற்கு உரிய தகுதியற்றவர்களை அந்த பணிகளில் ஈடுபடுத்தப்படும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது.

முன்பெல்லாம் மதபோதகர்களாக வயதானவர்களே இருப்பது வழக்கம். ஆனால், தற்போது மதபோதகம் செய்வதும் ஒரு தொழிலாகவும், அதற்கென ஒரு படிப்பையும் அறிமுகப்படுத்தி உள்ளதால், அதை படித்துவிட்டு ஏராளமான இளைஞர்கள் மதபோதனைக்காக வந்துவிடுகின்றனர். தங்களது பாவங்களை போக்க சர்ச்சைக்கு வந்து மன்றாடும் சில பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஆசைகாட்டி, தங்களது ஆசைகளை தீர்த்துக்கொள்கின்றனர்.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் பெனடிக் ஆன்டோ என்ற 27வயது  இளம் பாதிரியார் இளம்பெண்களிடம் சல்லாபம் செய்யும் வீடியோ ஒன்று வெளியானதால்,  பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,  சர்சுக்கு வந்த நர்சிங் மாணவி ஒருவரிடம் அத்துமீறியதாக கொடுத்த புகாரில், அதிர்ச்சி சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த 27 வயது சர்ச் பாதிரியார் பெனடிக் ஆன்டோ தலைமறைவாகி உள்ளார்.

இந்த இளம் வயது பாதிரியார்,  தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி அவர்களிடம் நட்பு பாராட்டுவதும், அதற்கு பதில் கூறும் பெண்களிடம்,  இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதை வரவேற்கும் பெண்களிடம் போனில் பேசி மயக்கி, தனது வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம்,  வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் வீடியோவும் பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி தனது ஆசை தீர்த்து வந்துள்ளார்.

 பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில்,  மதபோதகரின் லீலைகள் (பாதிரியாரின் லீலைகள்) என்ற பெயரில் கடந்த சில நாட்களாக அந்த பகுதி  சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், பாதிரியாரின் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதில், பாதிரியார் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் அவர் பேசிய காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் என கிளு, கிளுப்பூட்டும் பல காட்சிகள் வைரலாகி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட புகைப்படம், அடுக்கடுக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  மதபோதகர் (பாதிரியார்) கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இருந்து தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில், இந்த பாலியல் சேட்டை தொடர்பா,க கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் மதபோதகர் இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். அதோடு மதபோதகர் தொடர்பான ஆபாச வீடியோக்களையும், பதிவுகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மதபோதகர் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.