பெங்களூரு

திருமண ஆசை காட்டி பாலியல் கொடுமை செய்ததாகக் கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆன ஒய் கே தேவேந்தைரப்பா கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் ஆவார். ஒய்.தேவேந்திரப்பாவின் மகன் ரங்கநாத் மீது பெங்களூரு பசவனகுடி காவல் நிலையத்தில் 24 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் 42 வயதான ரங்கநாத் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும் இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பர்களான நிலையில், ரங்கநாத் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மது போதையில் பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

ரங்கநாத்தின் தந்தையிடம் இதைப் பற்றி பலமுறை முறையிட்டும் பயனளிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் ரங்கநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.