1
கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளத்தினால்  கோலாலம்பூரின் நான்கு முக்கிய சாலைகளும் சிலாங்கூரின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. .
நூற்றுக் கணக்கான வாகனங்கள் சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் போராடி வாகனங்களை மீட்டனர்.
2
 
வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்மணி உள்பட 11 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
கோலாலம்பூரின் முக்கிய சாலைகளான ஜாலான் புடு, ஜாலான் பங்சார், ஜாலான் செமாந்தான், ஜாலான் பந்தாய் பாரு ஆகிய இடங்கள் இந்தத் திடீர் வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தன. மாலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய பெரும்பாலோர் இந்த வெள்ளத்தில் சிக்கினர்.
a
 
ஷா ஆலம் உள்பட் சிலாங்கூரின் சில பகுதிகள் நேற்று இந்தத் திடீர் வெள்ளத்தினால் பாதிப்படைந்தன.  நீண்ட நேரம், கடும் வாகன நெரிசல் நிலவியது.