உலகின் செல்வாக்குமிக்க அறிஞர் கார்ல் மார்க்ஸ்
karlmarxகல்வியில் தேர்ந்தவர்களை எப்படி மதிப்பீடு செய்வது? பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களை சம அளவில் ஒப்பிட முடியுமா?
இந்த கேள்விகள் பதில் கூறுவதற்கு சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தகவல் விஞ்ஞானிகள் குழுவான இயற்கை ( நேச்சர் ) கொடுத்த அறிக்கையில் அவர்கள் இதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளதாக நினைக்கின்றனர். . மேலும், அவர்களின் கூற்றுப்படி, கார்ல் மார்க்ஸ் தான் மிகவும் செல்வாக்கு உள்ள அறிஞர்.

மானிய முகவர்கள், கால அவகாச குழுக்கள் என இன்னும் பலரால் தங்கள் சான்று விகிதத்தின் மூலம் விஞ்ஞானிகள் ஏற்கனவே வழக்கமாக மதிப்பிடு செய்யப்படுகின்றனர் . ஆனால், சில அறிவியல் துறைகள் மற்றவைகளை விட பெரியதாக இருக்கும், ஆகையால் சான்று எண்ணிக்கையை மட்டும் வைத்து தத்துவார்த்த இயற்பியலாளர்களை  மருந்து ஆராய்ச்சியாளர்களோடு ஒப்பிடுவது நியாயமானதல்ல .

 
karl marx 1

இந்தியானா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள்,  இயற்கை, இதை கணக்கில் எடுத்து கொள்ள முயற்சித்தது என்றனர். முதலில் அவர்கள், ஒரு விஞ்ஞானி ஒரு பெரிய ஆய்வு மட்டும் செய்திராமல் அதிகளவிலான ஆய்வுகளை செய்து சான்றுகளை பதிவிட்டுள்ளாரா என்பதை பார்த்தனர், (அந்த சான்றுகளில் H-குறியீட்டு இருக்க வேண்டும்). பின்னர், அவர்கள் அந்த விஞ்ஞானியின் மதிப்பெண்ணை மற்றவர்களோடு அவர்களது சொந்த துறையில் ஒப்பிட்டனர்.

இதில் கார்ல் மார்க்ஸ் மதிப்பெண் “சரித்திரத்தில் மற்ற அறிஞர்களின் சராசரியான H-குறியீட்டெண்ணை விட 22 மடங்கு (ஆனால் சராசரி பொருளாதார வல்லுனரை விட 11 முறை அதிகம்) அதிகமாக இருந்தது.
 
 
 
35,000 மற்ற உயர் அறிஞர்களின் மதிப்பெண்ணோடு  ஒப்பிடும்போது, மார்க்சின் மதிப்பெண் தனித்து நின்றது. இரண்டாவது இடத்தில் உளவியலாளர் சிக்மண்ட் பிராய்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இயற்பியலாளர் எட்வர்ட் விட்டென் (இன்னும் உயிருடன் வேலை பார்த்து வருகிறார்) இருந்தனர்.
 
 
 
 
 
 


தாஸ் காபிடல் (மூலதனம்) தான் ஸ்டிரிங் தியரியை விட முக்கியமானது என்று அர்த்தமா? பொதுவாக அப்படி இருக்க அவசியமில்லை, ஆனால் கல்லூரி வளாகங்களில் மார்க்ஸ் வெற்றி பெறலாம்.

மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்
Marx

 • 1814 – மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது
 • 1818 – காரல் மார்க்சு பிறந்தது
 • 1820 – பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு
 • 1836 – 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு
 • 1838 – மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்
 • 1842 – மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்
 • 1843 – ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு – ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்
 • 1844 – முதல் மகள் பிறப்பு.
 • 1845 – பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.
 • 1847 – சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.
 • 1848 – பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்
 • 1849 – கோலோனிலிருந்து வெளியேற்றம்.
 • 1849 – 1883 – இங்கிலாந்தில் வாழ்ந்தார்.
 • 1850 – இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.
 • 1852 – பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.
 • 1864 – முதல் இன்டர்நேசனல் தோற்றம்.
 • 1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.
 • 1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.
 • 1873 – மார்க்சு உடல் நலம் குன்றினார்.
 • 1881 – மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.
 • 1883 – மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.
 • 1883 – 1894 – மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.
 • 1895 – ஏங்கெல்சின் மரணம்

சிக்மண்ட் பிராய்ட் குறிப்பு:

sigmund freud

நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) பிறந்த தினம் இன்று (மே 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் ஃபிரெய்பர்க் நகரில் (தற்போது செக் குடியரசில் உள்ளது) 1856-ல் பிறந்தார். சிறு வயது முதலே அறிவுக் கூர்மையுடன் விளங்கினார். குடும்பம் வறுமையில் வாடினாலும் இவரது கல்விக்காக பெற்றோர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.

தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பம் வியன்னாவில் குடியேறியது. அங்குள்ள தரமான பள்ளியில் அவரைச் சேர்த் தனர் பெற்றோர். சிறந்த மாணவனாகத் திகழ்ந்தவர், வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

 செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

 சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி – மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள், ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினார்.

 கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘உணர்வுகளைக் கனவுகள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன. கனவுகள் ஒழுங்கற்றவை. உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’ என்றார். தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

 உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல. அது தொடர்ந்து மாறுவது என்பார். அதை உயிரோட்டமுள்ள உளவியல் (Dynamic Psychology) என்ற பெயரில் முன்வைத் தார். இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

 இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும் அவனது சிகிச்சைக்கும்கூட பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தது இவரது மிகப் பெரிய சாதனை. மனநல மருத்துவத் துறையில் இது ஒரு மைல் கல் கண்டுபிடிப்பாகும். மனிதனின் குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்கிக் கூறவும் இது பயன்படுகிறது.

 பாலியல் விருப்பு என்பது மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என்றார். கவிஞர்கள், சிந்தனையாளர்களுக்கு ஆழ் மனதின் தாக்கம் அதிகம் என்பதையும் கண்டறிந்து கூறினார்.

 உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id-Identity), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), மிகையான அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) என்று மனிதனின் குண இயல்புகளை வகைப்படுத்தினார். இந்த மூன்று குணநலன்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது என்றும் கூறினார்.

 அதுவரையில் தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர் களின் கட்டுப்பாட்டில் இருந்த ‘மனம்’ என்ற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் 83 வயதில் (1939) மறைந்தார்.

Reference: 1, 2.