NZ PM KEY 1
பிரதமர் ஜான் கீ

NZ SPREAKER david-carter-speaker1
டேவி கார்டெர்

 
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவிற்கு கீழ்படியாத பிரதமர் சபையை விட்டுவெளியேற்றம்.
 
NZ PARLIAMENT
நியூசிலாந்து பாராளுமன்றம் “பீஹைவ்(Beehive)”

இன்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில்,  பனாமா பேப்பர் லீக்ஸ் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் க்ரீன் பீஸ்,அம்னெஸ்டி போன்ற அமைப்புகளின் பெயரை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்காத பிரதமரை  அமரும் படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் பிரதமர் தொடர்ந்து பேசியதால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து சபாநாயகர் டேவிட் கார்டெர் கூறுகையில், சபையின் அனைத்து உறுப்பினர்களையும் சமமாய் நடத்தபடவேண்டும் என்பது தான் விதி. இதற்கு பிரதமர் விதிவிலக்கல்ல. நான்  அமைதியாய் அமரும்படி  எச்சரித்தும் அடங்காததால் சபையை விட்டு வெளியேற உத்தரவிட்டேன் என்றார்.
NZ SPEAKER David_Carter_t460
NZ PM 2
இதற்கு முன் ஜான் கீ எம்.பி.யாய் இருக்கும் போது மூன்று முறை சபையை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.
மூன்றாவது பிரதமர்:
நியூசிலாந்து பிரதமர் ஒருவர் இவ்வாறு சபையை விட்டு வெளியேற்றப்படுவது இது முதன்முறையல்ல.
நியூசிலாந்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்றப் படும் மூன்றாவது பிரதமர் இவர். இவருக்கு முன் 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் டேவிட் லாங் இருமுறையும் , 2005 ஆண்டு ஹெலென் கிளார்க் ஒருமுறையும் வெளியேற்றப் பட்டுள்ளனர்.  அவர்களின்  வழியில் தற்பொழுது ஜான் கீ-யும் சபையை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் டேவிட் லாங்

ஹெலன் கிளார்க்

NZ PARILAMENT INSIDE
நியூசிலாந்து பாராளுமன்ற சபை

 
நம்ம ஊர் சட்டசபைகளில் சபாநாயகர் முதல்வருக்கு எழுந்து வணக்கம் செலுத்துவது, எதிர்கட்சிகளை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றுவது என்று செய்திகளை படித்து படித்து சலித்த  நமக்கு , கீழே உள்ள காணொளி  விநோதமாக தோன்றினால் அது நமது தவறில்லை.