கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளராக ஒரு பெண் தேர்வு : செனிகலீஸ் ஐ.நா. அதிகாரி ஃபாத்மா சமோரா
ஐரொப்ப மண்ணைச் சேராத அந்நியர் ஒருவர் இந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவது இதுவே முதன்முறை.
சிகாகொ நகரில் நடந்த ஃபைஃபா காங்கிரஸில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விளையாட்டுத் துறையில் பணியாற்றிய அனுபவம் எதுவும் ஸ்மோராவிற்கு இல்லை. ஆனாலும், ஃபைஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபேன்டினோ கூறுகையில், ” ஊழலால் மங்கிப்போன கால்பந்து சம்மேளனத்தின் மானத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க இவரது நியமனம் கண்டிபாக உதவும் என்று நம்பிக்கை தெரிவ்த்தார்.
எங்களுக்கு வேர்றுமையில் ஒற்றுமை காண்பதிலும் பாலின சமத்துவத்திலும் நம்பிக்கை உண்டென உலகிற்குச் சொல்ல கிடைத்த வாய்ப்பாய் இதனைப் பார்க்கின்றோம் என்றார்.
ஊழல் காரணமாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஜெரொம் வால்க்கின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
54 வயதான ஸமோரா தகுதிச்தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தப் பதவிக்கு வருவார்.
இவரது நியமனம் ஒரு புதிய புத்துணர்ச்சீயை ஃபைஃபாவிற்கு தரும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
சமொராவிற்கு பிரெஞ்ச், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன் மொழிகளில் புலமை இருந்தாலும், பொதுச் செயலாளரின் முக்கியப் பணியான வர்த்தக ஒப்பந்தங்கள், ஒளிபரப்பு உரிமைகள் குறித்த அனுபவம் இல்லை.
இவர் 2000 ஊழியர்களை நிர்வகிக்க உள்ளார். பாதுகாப்பு, அரசியல், சமூக-பொருளாதார நிலைமைகளை மேற்பார்வையிட வுல்ளார்.
பெனின் மற்றும் குவைத் நாடுகலிள் உள்ள அரசுகளின் அரசியல் குறுக்கீடின் காரணமாக அந்நாடுகளின் அணிகளை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தோனேசியா அணி மீதான தடையை நீக்கியும் அறிவிப்பு வெலியிடப்பட்டுள்ளது. எனினும் தடை காரனமாக 2018 உலகக் கோப்பை மற்றும் 2019 ஆசியக் கோப்பையில் ம்விளையாடும் வாய்ப்பை இந்தோனேசிய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.