சென்னை:

ழிப்பறை-படுக்கை வசதியுடன் கூடிய அரசு குளிர்சாதன விரைவு பஸ்கள் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

தனியார் பேருந்துகளின் போட்டிகயை சமாளிக்கும் வகையில், ஏற்கனவே குளிர்சாதன வசதி கொண்ட விரைவு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வரும் நிலையில், தற்போது படுக்கை வசதியுடன் கழிவறை வசதியும் கொண்ட அரசு விரைவு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை வாங்கி உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.  கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில், 1,160 கோடி ரூபாய் செலவில், 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், இன்று, 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான, 500 புதிய பேருந்துகளை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து பேருந்தில் ஏறி அமர்ந்து ஆய்வு செய்தார்.

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பஸ்கள் உடன் சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்துக்கு 235 பஸ்கள் உடன்,   சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்ப கோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பஸ்களின் சேவைகளும் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. அத்துடன் சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

குளிர்சாதன வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்தில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல, பஸ் பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், எச்சரிக்கை ஒலிக் கருவி வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  மாற்று திறனாளி பயணிகள்  கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்பாக வைக்கவும் வசதி  செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார். அவருடன் துணைமுதல்வர் ஓ.பன் னீர் செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.