ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சியிலிருந்து இரண்டு மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கின்றனர். இது அம்மாநில பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

cong_lead

ராஜஸ்தான் மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் சுபாஷ் மஹரியா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசிங் இருவரும் காங்கிரஸ் கட்சியின் பிரதான செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜெவாலா மற்றும் கட்சியின் மாநிலத்தலைவர் சச்சின் பைலட் மற்றும் ரமேஷ்வர் டுதி ஆகியோர் முன்னிலையில் கங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் சச்சின் பைலட் பேசும்போது, இரு தலைவர்களுடைய வருகையும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்திருப்பதாக கூறினார்.
மேலும், கடந்த 2014-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் 25 இடங்களிலும், 2014 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 200-க்கு 163 இடங்களில் வென்ற பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் கணிசமாக சரிந்திருப்பதை சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல்களில் காங்கிரசுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையே இருந்த மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசம் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.