சென்னை:
நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]