முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம்…. தொடர்புக்கு இந்த எண்ணுக்கு அழைக்கலாம்

Must read

சென்னை:
முழுஊரடங்கு: காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தொடர்புக்கு 044 – 22253884 என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகமும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகம் செய்யப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

மேலும் காய்கறி, பழங்கள் வினியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள 044 – 22253884 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

More articles

Latest article