செப்டம்பர் 27ந்தேதி அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய நாள் இன்று.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.ஜெயலலிதா மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி தீர்ப்பை வாசித்தார்.  தீர்ப்பை நீதிபதி குன்ஹா தீர்ப்பை வாசித்து முடிந்ததும், வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் ஜெயலலிதா.

இதனால் அவரது முதல்பதவி பறிபோனது.  நீதிபதி குன்ஹாவின் அதிரடித்  தீர்ப்பு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபப்ட்டது என்று அறிவிக்கப்பட்டது.

உடனே ஜெயலலிதா தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி குன்ஹா,  “உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தைவிட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்தப் பெஞ்சில் போய் உட்காருங்கள்” எனச் சொல்லிவிட்டு, குன்ஹா எழுந்து போனார்.  இதனால், அவரது சிறை உறுதியானது.

இந்த தண்டனை மூலம் ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை இழந்தார். உடனே கர்நாடாக உயர்நீதிமன்ரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அது நிராகரிக்கபப்ட்டது.

ஜெயலலிதாவின் அகங்காரம், அரசியல், பகட்டு  வாழ்க்கைக்கு  முற்றுபுள்ளி வைத்த தினம் இன்று.