செப்.22: மக்கள் பார்வையிலிருந்து அம்மா மறைந்த தினம்!

Must read

நெட்டிசன்:

Nambikai Raj என்வரின் முகநூல் பதிவு

செப் 22 மக்கள் பார்வையிலிருந்து அம்மா மறைந்த தினம்.
செப் 22 மக்கள் பார்வையிலிருந்து அம்மா மறைந்த தினம்.

மறைத்தவர்களும், மறைக்க உடந்தையாக இருந்தவர்களும் ஒருநாள் உறுதியாக அழிவார்கள்.

செப் 22ம் தேதி போயஸ் கார்டன்முதல் அப்போலோ வரை CCTV கேமராக்கள் செயலிழந்து போனது. அம்மாவால் துரோகி எனக்கூறி விரட்டப்பட்ட கும்பல் அப்போலோவில் குவிந்தது. டிசம்பர் 5ம் தேதி அந்த கும்பல் ராஜாஜி ஹாலில் அம்மா உடலை சுற்றி நின்று இனி நாங்கள்தான் எல்லாம் என உலகிற்கு சொல்லாமல் சொல்லியபோது கட்சி தொண்டர்கள் முதுகில் குத்தப்பட்டத்தை உணர்ந்தார்கள்.

பதவியை அடைய ஒரு கும்பல் உயிரை பறிக்க, தங்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள இன்னொரு கும்பல் அப்போலோ வாசலின் கீழ்த்தளத்திலேயே நின்று விட்டது.

விசுவாசமிக்க அடிமட்ட தொண்டன் அப்போலோ வாசல் மதில் சுவரோடு தடுத்து நிறுத்தப்பட்டான்.

துரோக கும்பல் கதை எழுதி கொடுக்க அந்த கதை வசனத்தை மக்களிடமும், தொண்டர்களிடமும் சொல்லி நடித்துக்கொண்டிருந்தது ஆட்சி அதிகாரத்திலிருந்த கும்பல்.

தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள அம்மாவுக்கு உண்மையில் என்னதான் நடந்தது என துரோக குடும்பத்திடம் கேள்வி கேட்கக்கூட துணிச்சல் இல்லை அதிகார போதையில் இருந்த கும்பலுக்கு.

இந்த கூட்டு நாடகத்தில் நாட்டு மக்களும், கட்சி தொண்டர்களும் பலியானார்கள்.

இன்று ஆரம்பித்த அப்போலோ நாடகம் டிசம்பர் 5ம் தேதி முடித்து வைக்கப்பட்டது.

உண்மையிலேயே அப்போலோவிற்குள் அம்மா உயிருடன்தான் இருந்தாரா என உலகம் நினைக்க ஆரம்பித்தது.

இடையிடையே ஆளுநர், தேசிய, உள்ளூர் அரசியல்வாதிகள் என பலரும் வந்து போனார்கள். அவர்கள் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளம் வரை வந்து போனார்களா என கேட்டால் பதில்தான் இல்லை யாரிடமும்.

நாங்கள் நம்பிய தெய்வம் எங்களை கைவிட்டது.

‘வானம் இடிந்து விழப்போகிறது, பார்த்துவா புகழ் மகளே ‘ என வாயாற புகழ காத்திருந்தோம்.

ஆனால் அந்த வானமே இடிந்துவிழும் அளவிற்கு கேட்கக்கூடாத செய்தியை கேட்டோம்.

தனி ஒரு ராணுவமாக அரசியலில் கோலோச்சிய ஒரு சிம்மத்தை ராணுவ கவச வாகனத்தில் மக்களின் கண்ணீர் கடலில் நீந்தி வர கண்டோம்.

பூமகளை பூமியில் விதைத்தோம்.

உண்மை தொண்டர்கள் துரோக கூட்டத்திற்கு எதிராக திரண்டார்கள்.

நேற்றுவரை யார் என்றே தெரியாத தீபா வீட்டிற்குக்கூட அலையலையாக சென்றார்கள்.

அப்போதும் சசிகலாவை சின்னம்மா என சொல்லிக்கொண்டு தற்போதைய ஓபிஎஸ், இபிஎஸ் அதிகார பசியில் திருப்தியாக ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

பதவி பிடுங்கப்பட்டதும் தர்ம யுத்தத்தை தொடங்கினார் பன்னீர் செல்வம்.

வேறு வழியில்லை. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.

துரோக கூட்டத்தை வீழ்த்த அங்கிருந்தே ஒரு ஆயுதத்தை எடுத்தோம்.

துரோக குடும்பம் எந்த கட்சி, ஆட்சிக்கு ஆசைப்பட்டு ஒரு ஆலமரத்தை சாய்த்ததோ அதை நடக்கவிடாமல் செய்தார் அங்கிருந்து செல்லாக்காசாக தூக்கி எரியப்பட்ட பன்னீர் செல்வம்.

ஓரளவிற்கு ஆறுதல் கிடைத்தது.

நீதி விசாரனை நடத்தி அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர, அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க, அவர் புதைக்கப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் அமைக்க இந்த அரசு ஓரிரு ஆண்டுகள் இருந்தாக வேண்டியது கட்டாயம்.

அது நடக்கவிடாமல் தடுக்க மன்னார்குடி கும்பல் கடைசிநேர யுத்தத்தில் இறங்கி ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு போயிருக்கிறது.

காலம் உள்ளபோதே இதை செய்து முடிக்காவிட்டால் அதிமுக தொண்டன் எடப்பாடி & பன்னீர் தலைமைக்கு முடிவு கட்டுவான்.
கட்சி, ஆட்சியை இவர்கள் தக்க வைக்க இவர்கள் இதை செய்தேயாக வேண்டும்.

இந்த குழப்பத்தில் குளிர்காயும் சங்கிகளின் சேட்டையும், மோடியின் வித்தையும் ஒன்றும் தெரியாமல் இல்லை.

நன்றாக தெரியும். இங்கு முதலில் வீழ்த்தப்பட வேண்டியது யார் என தெளிவாக தெரிந்ததால் நிறையபேர் அமைதி காக்கிறோம்.

சசிகலா காலில் விழுந்துகிடந்தவரை பன்னீர்செல்வம் & எடப்பாடியை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.

தற்போதைக்கு இவர்கள் இருவரும்தான் ஆயுதம். போர் முடியட்டும் பிறகு இந்த ஆயுதங்கள் தேவையா இல்லையா என முடிவெடுப்போம்.

– அம்மாவின் நினைவுகளுடன்
அவரின் ஒரு கடைநிலை தொண்டன்.

More articles

Latest article