சென்னை:

ன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவை அடுத்த மாதம் (செப்டம்பர்)  11-ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்

கன்னியாகுமரியில் உள்ள பாறை ஒன்றில், கன்னியாகுமரியில் குடிகொண்டுள்ள பகவதி அம்மன், ஒற்றைகாலில் தவம் இருந்ததாகவும், அதன்ல் அவரது  கால்தடம் அந்த பாறையில் பதிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த விவேகானந்தர், 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்தபோது, அந்த பாறைக்கு சென்று  அம்மனின் கால்தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார்.  இதை நினைவுபடுத்தும் வகையில் அங்கு விவேகானந்தர் மணி மண்டபம் கட்டப்பட்டு  1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி நினைவு  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த மண்டபம் நிறுவி கட்டப்பட்டு 49 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்  வரும் செப்டம்பர் 2-ந்தேதி 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி,  “மகா சம்பர்க்க அபியான்” என்ற பெயரில் வருகிற செப்டம்பர் 11-ந்தேதி பொன்விழா தொடங்குகிறது. இந்த பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.