ஆந்திர பிரதேசம் பிரிவு : ஊதியம் பெறாத அரசு அதிகாரிகள்

தராபாத்

ந்திரபிரதேச பிரிவுக்குப் பின் 24 அரசு அதிகாரிகளுக்கு இரு மாநிலங்களிலும் வேலை ஒதுக்கப்படாததால் அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை.

ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின் அரசு அதிகாரிகளும் இரு மாநிலங்களுக்குமாக மாற்றப் பட்டனர்.  இதில் 24 அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் செக்‌ஷன் ஆஃபிசர்களாக பணி புரிந்து வந்தனர்.  இவர்களை ஆந்திர அரசு க்கு ஒதுக்கி ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தெலுங்கானா அரசு அனுப்பி வைத்தது.  ஆந்திர அரசு இவர்கள் அதிகப்படி அதிகாரிகள் (In excess)  எனக் கூறி வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் இரு அரசிலிருந்தும் இவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை.

ஒருங்கிணைத்த ஆந்திர பிரதேச தலைமைச் செயலகத்தில் பணி புரிந்தவர்கள் பொதுவாகவே ஐதராபாத் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள்.  ஆனால் ஆந்திரா தெலுங்கான ஒப்பந்தப்படி அவர்கள் 52 : 48 என்னும் விகிதத்தில் பிரிக்கப்படவேண்டும்.  இது மக்கள் தொகையில் அடிப்படையில் கணக்கிடப் பட்டுள்ளது.  ஆனால் ஆந்திர அரசுக்க்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளை அதிகப்படியாக உள்ள அதிகாரிகள் எனக்கூறிவிட்டது.

அதிகாரிகள் தாங்கள் ஆந்திர அரசுப் பணியையே விருப்பமாக தேர்ந்தெடுத்ததாகவும், ஆந்திர அரசும், தங்களை அதிகப்படியாக இருந்தாலும், பணி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.  ஆனால் தெலுங்கானா அரசு இவர்களை விடுவித்ததும் பணியில் மீண்டும் அமர்த்த ஒப்புக்கொள்ளவில்லை.

அரைக்காசானாலும் அரசு வேலை என்பது பழமொழி.  அரைக்காசுக்கும் ஆலாய்ப் பறக்கௌம் அரசு அதிகாரிகள் என்பது புது மொழி

 

 

 


English Summary
Seperation of andhra left 24 officers withou work and salary