சென்னை

ன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.

 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் உச்சநீதிமன்றத்தில் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தியது. .எனவே அவர், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இன்ற் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

அவர் தனது மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.