டில்லி:

ந்தியாவில் கடந்த சில மாதங்களாக சாதாரணமாக நடைபெற்று வந்த பங்குசந்தைகள் தேர்தல் முடிவு வெளியானதும் உயரத் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பங்கு வர்த்தகத்தல் பெரும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முதலீடுகளை பெறுவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர்.  தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதும், பங்குசந்தைகள் வரலாறு காணாத வளர்ச்சி அடைந்தன.

இந்த நிலையில், நேற்று மோடி தலைமையில் மீண்டும் பாஜக அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில்,  இன்று காலை முதலே பங்கு சந்தைகள் உயர்ந்து வருகின்றன.  சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 40,018 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  நேற்றைய பங்குச்சந்தை குறியீட்டு எண் 330 பு்ளளிகள் உயர்ந்து 39,832 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 11,946 என்ற புதிய உச்சத்தையும் எட்டியது.

பாரதி ஏர்டெல், எஸ் வங்கி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகள் ஏற்றம் பெற்றன. இந்நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டெண் சென்செக்ஸ் மீண்டும் 40,000 புள்ளிகளைக் கடந்து உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 187 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 40,018 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. நிப்டி12ஆயிரம் புள்ளிகளில் உள்ளது.

இதன் காரணமாக பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள் மகிர்ச்சியுடன் உள்ளனர்.