மத்திய அமைச்சரான முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்

Must read

டில்லி

வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய ஜெய்சங்கர் தற்போது மத்திய அமைச்சர் ஆகி உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தத்துவ மேதையான கே சுப்ரமணியம் என்பவரின் மகன் ஜெய்சங்கர்.  கடந்த 1955 ஆம் வருடம் டில்லியில் பிறந்த இவர் அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு படித்துள்ளார்.  அதன் பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு உறவுத் துறையில் எம் ஃபில் மற்றும் பிஎச்டி முடித்துள்ளார்.    இவர் 1977 ஆம் வருடம் ஐஎஃப்எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜெய்சங்கர் அமெரிக்கா மற்றும் சீன நாட்டுடன் அணு ஆயுதக் கொள்கை குறித்த  விவாதங்களை இவர் வெற்றிகரமாக முடித்தவர் ஆவார்.  குறிப்பாக 2008 ஆம் வருடம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.  அது மட்டுமின்றி 2017 ஆம் வருடம் சீனாவுடனான தோக்ளாம் விவாதத்திலும் முக்கிய பங்காற்றி உள்ளார்.

தற்போது 64 வயதாகும் ஜெய்சங்கர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.   குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த காலத்தில் இருந்து தொடங்கிய நட்பினால் ஜெய்சங்கர்  பல வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்துள்ளார்.

நேற்று பதவி ஏற்ற பாஜக அமைச்சரவையில் ஜெய்சங்கர் அமைச்சராக பத்வி ஏற்றுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article