காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

Must read

திருச்சி: 
டு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு திருடும் கும்பலைத் தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார்.
அப்போது அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக விசாரிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article