சென்னை: 
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.