சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்….
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
ம்முறை பொங்கலுக்கு தமிழக அரசு 33, 477 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
இதன் பின்னணியை அலசினால் ரொம்பவும் காமெடியாக இருக்கும். ரயில்வே கூட இப்படித்தான்.
அதாவது சென்னை பீச்சில் காலை எட்டரைக்கு ஒரு இஎம்யூ ட்ரெயின் மேல்மருவத்தூர் புறப்படும். 11 மணிவாக்கில் சில நிமிடங்களில் அதே ட்ரெயின் வேறொரு நம்பரில் மருவத்தூர் டூ விழுப்புரம் ரயிலாக மாறிவிடும் .
அதே ட்ரெயின் விழுப்புரம் போய்சேர்ந்த கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் டூ மருவத்தூர், அப்புறம் மருவத்தூர் டூ பீச் என இரண்டு வெவ்வேறு நம்பர்களில் மாலை பீச்சுக்கு திரும்பும்..‘
பீச்சுக்கு போனவுடனே சில நிமிடம் நின்று உடனே வாரியடித்துக்கொண்டு அரக்கோணம் வழியாக வேலூர் கண்ட்டோன்மென்ட்டுக்கு இரவு ஒன்பதே முக்காலுக்கு போகும்..
அதாவது பீச்- மருவத்தூர் – விழுப்புரம் – மருவத்தூர் – பீச் – வேலூர் எனஒரே ட்ரெயின்.. காலை எட்டரைக்கு ஆரம்பித்து இரவு 480 கிலோ மீட்டர் தூரம் (வைகை எக்ஸ்பிரஸ் சென்னை மதுரை இடையே ஓடும் தூரத்தைவிட குறைவு) தொடர்ந்து ஓடி முடிக்கும்போது ரயில்வே கணக்குப்படி வெவ்வேறு நம்பர்களில் ஐந்து தனித்தனி ட்ரெயின்களாகவே கருதப்படும்.
அதே மாதிரியான வழித்தடத்தில் இன்னொரு சிறப்பு ரயிலை இயக்கினால், ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் என்றே ரயில்வே பெருமையோடு சொல்லும்
நம்ம தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் அன்ட்கோவும் அப்படித்தான். பொங்கலுக்கு 33,477 சிறப்பு பேருந்துகள் என சொல்லும். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
போ.வ. துறைபாலிசி நோட் பிரகாரம்
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையே 20, 970 தான். அதுவும் ஸ்பேர் எனப்படும் 1600+ தற்காலிக பேருந்துகள் உட்பட
இதுல எப்படி 33,477 சிறப்பு பேருந்துகளை இயக்கமுடியும்..?
எல்லாம் நாம மேலே சொன்ன ஒரே ட்ரெயின்.. ஐந்து நம்பர்கள் கதைதான்..
உதாரணத்திற்கு திருச்சி- மதுரை இடையே ஒரு நாளைக்கு மூணு ட்ரிப்.. அதாவது ஆறு சிங்கிள் போய் வந்தால் அது ஆறு சிறப்பு பேருந்துகள். மூணு நாளைக்கு அதுவே தொடர்ந்தால் ஒரே பேருந்து, ஆனால் 18 சிறப்பு பேருந்துகள்..
புள்ளி விவரப்படி அரசாங்கத்தை ஒருத்தரும் தப்பு சொல்லமுடியாது..
மத்திய மாநில அரசாங்கங்கள் அந்தக்காலம் முதல் இந்தக்காலம்வரை மட்டுமல்ல எந்தக்காலமும் இப்படித்தான்..