டில்லி

ந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.    குறிப்பாகப் பஞ்சாப் மாநில ஆளும்  கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது.   இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டபடி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ள்னர்.  இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மனீஷ் திவாரி, அகிலேஷ் பிரசாத் சிங், சங்கர் சிங் வாகேலா, சசிதரூர், எம் ஏ கான், சந்தீப் தீட்சித், விவேக் தன்கா,  ஆனந்த் சர்மா, பிரித்வி ராஜ் சவுகான், பூபின்ந்தர் சிக் ஹூதா, ராஜ்பாப்பர், மனிசங்கர் ஐயர், பி ஜே குரியன், ராஜேந்தர் கருர் பட்டால், குல்தீப் சர்மா, பிரனீத் கவுர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில்,

“காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பற்றி  ஆராய ஒரு கூட்டம் ஒன்றை நடத்தினோம்.  இந்த கூட்டத்தில் தோல்வியால் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த தோல்விகளைத் தவிர்க இனி தலைமை மற்றும் முடிவு எடுத்தலை அனைத்து  மட்டத்திலும் எடுத்து வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாஜகவை எதிர்க்கக் காங்கிரஸ் கட்சியை பலமாக்குவது அவசியமாக உள்ளது. எனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஒத்த கருத்துள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு மாற்றான சக்தியாக 2024 வருடத் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.   

இது குறித்த அடுத்த நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்””

என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.