சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. இதையடுத்து, ஏரியில் இருந்து கடந்த 7 ம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. முதலில்  உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக இருந்து அதிகபட்சமாக 2ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மழை நின்றதும் பின்னர் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உள்பட சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.  தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால், உபரி நீர் திறப்பு 1000 அடியாக இருந்தது.  அவை நேற்று இரவு இரண்டாயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தற்போது அவை  3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.