ஜானி டெப் ஆன செல்வராகவன்.. நடிப்புக்காக முகம் மாற்றி பரிசோதனை..

Must read

யக்குனர் செல்வராகவனிடம் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற மாறுபட்ட படங்களை ரசிகர்கள் கண்டார்கள். கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். இன்னும் பல மாறுபட்டங்களை ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்தார்கள். திடீரென்று சில நாட்களுக்கு முன் செல்வராகவன் சாணிக் காயிதம் என்ற படம் மூலம் நடிகர் ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி யது.


செல்வராகவன் இணைய தள பக்கத்தில் தத்துவ மழையாக பொழிவது வழக்கம் இந்த லாக்டவுன் காலகட்டத்திலும் அவர் இணைய தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி யடையச் செய்துள்ளது. இன்று ஒரு வீடியோ வெளிட்டார்.
பைரட்ஸ் ஆப் கரிபியன் படத்தின் ஹீரோ ஜானி டேப் போல் தனது தோற்றத்தை மாற்றி ஃபேஸ் ஆப் செயலி மூலம் முகத்தை மாற்றி வீடியோ வெளியிட்டிருக் கிறார்.

இதுபற்றி செல்வராகவன் கூறும்போது, ’என் முகத்தை எனது மனைவி கீதாஞ்சலி மாற்றி இருக்கிறார்’ என தெரிவித்திருக்கி றார்.
சும்மா சொல்லக்கூடாது அசல் ஜானி டெப்பாக ஆக்‌ஷன் எல்லாம் சூப்பராகவே இருக்கிறது என ரசிகர்கள் கமென்ட் பகிர்ந் திருக்கின்றனர்.

More articles

Latest article