அரவிந்த்சாமி நடிப்பில் தலைவாசல் செல்வா இயக்கத்தில் 1997ல் வெளியான படம் புதையல். தற்போது மீண்டும் செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருக்கிறார்.
இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் தொடங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைக்க இமான் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.