சென்னை

இன்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் கிளாம்பாக்கத்தை கேளம்பாக்கம் எனக் கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சட்டசபை கேள்வி நேரத்தில், அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாவது குறித்து கேள்வி எழுப்பினார். அவர் அப்போது கிளாம்பாக்கம் என்பதற்குப் பதில் கேளம்பாக்கம் என்று பேசினார்.

அவர் அருகில் இருந்த சக உறுப்பினர்கள், அண்ணே, அது கிளாம்பாக்கம் என்றனர்  ஆயினும் அதை அவர் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,

“செல்லூர் ராஜு அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம். செல்லூர் ராஜு அண்ணனைப்  பார்த்தாலே எல்லோருக்கும், ஒட்டுமொத்த சபைக்கே மகிழ்ச்சியாக ஆனந்தமாக சிரிப்பு வரும். 

உங்களுடைய மகிழ்ச்சியால் எங்களுக்கும் மகிழ்ச்சி. குழப்பம் அங்கே இல்லை. குழப்பம் உங்களுக்குத் தான் இருக்கிறது.  நீங்கள் வேண்டுமானால் வாருங்கள், நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் ”   

என்று பதில் அளித்த செல்லூர் ராஜு பேச்சை நகைச்சுவை ஆக்கி உள்ளார்.