மந்திரிகள் பேச்சு… பொழுதுவிடிஞ்சா போச்சு!: தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தலைவர் பேட்டி

Must read

மிழக அமைச்சர்களோட பேச்சுக்களை நெனச்சி தமிழ்நாடே கதிகலங்கிப்போயிருக்கு. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசினாகூட பரவாயில்லே… நிமிசத்துக்கு ஒரு பேச்சு பேசறாங்களேனு அதிர்ச்சியில உறைஞ்சு பேயிருக்காங்க மக்கள்.

இந்த நெலையில,  தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர்  செல்லப்பாண்டியன்கிட்ட கருத்து கேட்கிறதுதான் பொருத்தமா இருக்கும்னு அவர்கிட்ட பேசினேன்.

காய்ச்சி எடுத்துட்டாரு அவரு:, “அதிமுக என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தென்னாட்டு காந்தி என போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் பேச்சு, ஆற்றல், திறமை மீது ஈர்ப்பு கொண்டு தான் துவங்கிய இந்த கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயரை சேர்த்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.! அதோட கொடியில அண்ணா படத்தையும் சேர்த்தாரு.

கடைசி வரைக்கும் எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கிற வள்ளலாவே அரசியல்ல இருந்தாரு எம்.ஜி.ஆர்.! தன் உயிலில்கூட காது கேளாதவர்களுக்காக சொத்து எழுதி வச்சவரு.

செல்லப்பாண்டியன் – சி.வி. சண்முகம்

இப்போ இருக்கிற அதிமுககாரங்க, அண்ணா பெயரையும் எம்ஜிஆர் பெயரையும் கெடுக்கிறாங்க…

ராத்திரி நேரத்துல ஓ.பி.எஸ் துரோகி, துரோகி, துரோகி”  ன்னு குழறிக்குழறி பேசினாலும் அழுத்தம் திருத்தமா சொன்னாரு  மாண்புமிகு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம். இப்போ பகல்லயே, “அண்ணன் ஓ.பி.எஸ்”னு பாசத்தோட பேசறாரு.

இன்னொரு மந்திரி உதயக்குமாரு, ஓ.பி.எஸ்ஸை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச முடியுமோ அப்படி பேசினாரு. இப்ப,  விசுவாசத்துக்கு உதாரணமே அண்ணன் ஓபிஎஸ்தான் அப்படினு சொல்றாரு.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன்  “ஜெயலலிதா இறந்ததற்கு விசாரணை நடத்தினா  அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் பதில் சொல்லணும்”னு வீராப்பா பேசினாரு. அப்புறம் ஓபிஎஸ் தங்கமான மனுசன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கிறாரு.

சரி.. ஒரு முறை மாத்திப் பேசறாங்கன்னு பார்த்தா, இப்போ மறுபடி, “ஓ.பி.எஸ். பெரிய ஆளா.. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்”னு ஏதோ இப்பத்தான் கண் முழிச்ச மாதிரி பேசறாங்க.

இவங்களைவிட குடிகாரன் எவ்வளவோ மேல்.

அமைச்சர்கள் தாங்கள் கொள்ளையடித்ததை தக்க வைப்பதற்காக மாற்றி மாற்றி பேசுகிறாங்க . குடிகாரனாவது குடிச்சத்துக்கு அப்புறம் மனசில்உள்ள உண்மைகளை தெளிவாகச் சொல்வான்.  ஆனால். என்றார்.

அவரிடம், “போன பிப்ரவரி ஏழாம் தேதி ராத்திரி செய்தியாளர்குக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் சிவி சண்முகம், தன்னோட மனசில் உள்ள உண்மைகளை பேசிய மாதிரி இருந்ததா பலரும் சொல்றாங்களே” என்றேன்.

“அன்னைக்கு அவரு எப்படி இருந்தாருன்னு எல்லோருக்குமே தெரியும். கண்ணு சிவக்க, குழறிக் குழறிப்பேசினார். அதுக்காக அவர் தன்னோட மனசில் உள்ள உண்மைகளை பேசினார்னு சொல்ல முடியாது.

ஏன்னா,  ஊழல் செய்து சேர்த்து வச்ச காசு பணத்தை க்க வைக்க போராடுற கும்பல்ல அவரும் இருக்கிறார். அதனால கண்ணு சிவக்க, குழறிப்பேசினதாலேயே அவரு நல்லவரா ஆயிட முடியாது” என்று தீர்மானமாகச் சொன்னார் செல்லப்பாண்டி.

More articles

Latest article