திருப்பதியில் அஜித்துடன் செல்ஃபி: ரசிகர்கள் குஷி

:

டிகர் அஜித் இன்று திருமலை சென்று வெங்கடாஜலபதியை சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள்  பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

நடிகர் அஜித் தற்போது  சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் அஜீத்துடன், இந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில்,  நடிகர் அஜித் இன்று திடீரென திருப்பதி சென்று சாமி தரி‌சனம் செய்தார்.

கோவில் வந்த அஜித்திற்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாகத்தினர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

தரிசனம் செய்து முடித்து வெளியே வந்த நடிகர் அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எழுந்து மகிழ்ந்தனர்.


English Summary
Selfie with Ajith in Tirupathi temple