அறிமுக இயக்குநர் மதிமாறன் உருவாக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செல்ஃபி’.
வர்ஷா , கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி யூடியூபில் வெளியாகி உள்ளது.
இந்தப் படம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை கதைக் களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் பாமக இளைஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.