‘பூசாண்டி வர்றான்’ : தங்கர் பாராட்டு!

Must read

‘பூசாண்டி வர்றான்’ திரைப்படத்தை இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டி உள்ளார்.
இப்படம், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுதும் திரையங்குகளில் வெளியாகிறது. படத்தை
ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ளார்.
ஜே.கே. விக்கி இயக்கி, எடிட்டிங் செய்துள்ள இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இசை, டஸ்டின்.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இப்படம் மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது
க்ரைம், த்ரில்லர், ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
படக்குழுவில் ஒருவரைத் மற்ற அனைவரும் மலேசிய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் பாராட்டி உள்ளார்.
‘வரவேற்போம்’ என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ளதாவது:
“தமிழத் திரைப்படங்களுக்கு காலங்காலமாக வெறும் பார்வையாளர்களாகவே இருந்து பணத்தை அதிக அளவில் கொட்டிக்கொட்டி கொடுத்தவர்கள் மலேயசியத் தமிழர்கள்.
நமது உறவுகளான அவர்களின் பிள்ளைகள் அண்மைக்காலமாக திரைப்படக்கலையில் நாட்டம் கொண்டு படைப்புகளைத் தந்து கொண்டு உள்ளனர்.
வளரும் நிலையில் இருக்கும் அவர்களின் படைப்பில், ‘பூசாண்டி வரான்”’ எனும் திரைப்படத்தை எனக்கு காணும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர்களின் இயல்பான நடிப்பாற்றாலைக் கண்டு வியந்து போனேன். நமது மரபின் உயிரோட்டத்தில் நமக்குள் கலந்துள்ள நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள விறுவிறுப்பான இப்படைப்பை நாம் ஊக்கமளித்து ஆதரிக்க கடமைப்பட்டு உள்ளோம்.
ஏற்கெனவே மலேயசிய நாட்டில் பெரும் வெற்றி கண்டு தமிழ்நாட்டின் திரையரங்குகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெளியிடும் படக்குழுவினருக்கு எனது மனம் நிறைத்த வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன் – இவ்வாறு தங்கர் பச்சான் குறிப்பிட்டு உள்ளார்.

More articles

Latest article