சென்னை,
சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

சேகர் ரெட்டி

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த 8ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், ரத்தினம் என்ற திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் ரூ.6 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தந்தது தொடர்பாக சேகர் ரெட்டி கூட்டாளிகள் அசோக் ஜெயின், மகாவீர் இராணி ஆகியோரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 6.5 கிலோ தங்கத்தினையும் வருவாய் துறை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் ஜனவரி 11ந்« ததி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The Enforcement Directorate arrested Sekhar Reddy’s two associates
Also read