சென்னை:
சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநகர் முழுவதும் ஒட்டுமொத்தமாக 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.