சென்னை:
வெளியூரில் இருந்து சென்ன திரும்ப இன்றும், நாளையும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளியூரில் இருந்து சென்னை திரும்ப இன்னும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த பஸ்கள் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 500 சிறப்பு பஸ்களும், நாளை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.