சென்னை

ம்மை பாக்சிங்குக்கு அழைத்த வீரலட்சுமியின் கணவருடன் மோதத் தாம் தயாராக உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். 

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். பிறகு அந்த புகாரைத் திரும்ப பெறுவதாக நடிகை விஜயலட்சுமி அறிவித்தார்.  இந்த விவகாரத்தில் அடுத்த திருப்பமாகச் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது.

வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை பாக்சிங்கிற்கு இழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. வீரலட்சுமி தரப்பிலிருந்து இந்த ஆடியோ தொடர்பாக எந்த கருத்தும் இதுவரை சொல்லப்படவில்லை. 

சீமான் செய்தியாளர்களிடம்,

”நான் பாக்ஸிங்கிற்கு தயார். இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன்.  வீரலட்சுமியின் கணவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அவரை எதிர்கொள்கிறேன்’  

என்று தெரிவித்துள்ளார்.