சென்னை

டிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார்.  அதில் சீமான் தன்னிடம் வருடக் கணக்கில் குடும்பம் நடத்திய சீமான் மணம் முடிப்பதாகக் கூறி ஏற்மாற்ரி விட்டதாகவும் இதனால் அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்

நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் ஒரு மனு  அளித்துள்ளார்.

சீமான் அந்த மனுவில்,

”நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக ஒரே நேரத்தில் மூன்று பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.  இந்த விசாரணைக்கு நான் வரும் போது எனக்கு எதிராக காணொலிகளை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.

எனக்குக் கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது.

மேலும் விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரின் குற்றச்சாட்டுக்கள் உண்மையின்  அடிப்படையில் இல்லை. என்னைப் பற்றி பொதுவெளியில் பேசி எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வேலையை செய்கின்றனர்”

என்று தெரிவித்துள்ளார்